பீகாரில் நாளை (நவம்பர் 20) புதிய அரசு அமைய உள்ள நிலையில், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவராக நிதிஷ் குமார் இன்று ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதேபோல், பாஜக சட்டமன்றக் குழு தலைவராக சாம்ராட் சவுத்ரி தேர்வு செய்யப்பட்டார். நடந்து முடிந்த பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதில், பாஜக 89, ஜேடியு 85, எல்ஜேபி (ஆர்வி) 19, ஹெச்ஏஎம் 5,...