டெல்லி காற்று மாசு போராட்டம் தொடர்பாக காவல் துறை பதிவு செய்த வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டை டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கம் (ஜேஎன்யுஎஸ்யு) நேற்று முன்தினம் மறுத்தது.வழக்கில் போலியான குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கம்தெரிவித்துள்ளது. டெல்லியில் நிலவும் காற்று மாசு பிரச்னைக்கு நடவடிக்கை எடுக்கக் கோரி இந்தியா கேட் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடைபெற்றது. போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டப்பட்ட நிலையில், அப்பகுதியிலிருந்து கலைந்து செல்லுமாறு போலீஸார் எச்சரித்தனர்....