குடும்ப பிரச்னையை வீட்டுக்குள் நான் தீர்த்துவிடுவேன், அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம், கட்சியை எவ்வாறு பலப்படுத்துவது என்பது குறித்து சிந்தித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராஷ்டிரிய ஜனதா தள மூத்த தலைவர்களுக்கு லாலு பிரசாத் கூறியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாட்னாவில் உள்ள தன்னுடைய இல்லத்தில் கட்சியின் முக்கிய தலைவர்கள் மற்றும் பீகார் தேர்தலில் போட்டியிட்டவர்களை நேரில் அழைத்துப் பேசியிருக்கிறார் லாலு பிரசாத் யாதவ். இந்தக் கூட்டத்தில், லாலு பிரசாத் யாதவ், மனைவி ராஃப்ரி தேவி மற்றும்...