கர்நாடகாவில் முதல்வர் மாற்றம் தொடர்பான சர்ச்சை அதிகரித்துள்ள நிலையில், ‘காங்கிரஸ் உயர் தலைமை அழைத்தால் டெல்லிக்குச் செல்வேன்’ என்று முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார். கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு பதவியேற்று நவம்பர் 20 அன்று தனது ஐந்தாண்டு பதவிக் காலத்தின் முதல் பாதியை கடந்தது. ஆட்சியின் முதல் இரண்டரை ஆண்டு காலம் சித்தராமையா முதல்வராகவும், அடுத்த இரண்டரை ஆண்டு காலம் டி.கே.சிவகுமார் முதல்வராகவும் இருப்பார்கள் என பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. தற்போது சிவகுமாரை முதல்வராக்க வேண்டும் என அவரின்...