வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. பீகாரைத் தொடர்ந்து தமிழகம், கேரளம் உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகின்றது. தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் அவசரகதியில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை மேற்கொண்டு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு சாதகமான வாக்காளர்களை மத்திய அரசுடன் இணைந்து...
Tag: Parliament
குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவை தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணனை புகழ்ந்த பிரதமர் மோடி
குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவையின் தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணன், எளிய விவசாய பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்தவர், தனது முழு வாழ்க்கையையும் சமூக சேவைக்காக அர்ப்பணித்துள்ளவர் என்று மாநிலங்களவையில் பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று , சி.பி. ராதாகிருஷ்ணன் மாநிலங்களவையின் தலைவராக இன்று தனது பணியை தொடங்கினார். அவரை வரவேற்று வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி மாநிலங்களவையில் உரையாற்றினார். பிரதமர் மோடி தனது உரையில், “குளிர்கால கூட்டத் தொடர்...
ஜக்தீப் தன்கர் குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய மல்லிகார்ஜுனா கார்கே: பாஜக கடும் எதிர்ப்பு
மாநிலங்களவைத் தலைவராக இருந்த ஜக்தீப் தன்கருக்கு பிரிவுபசாரம் செய்வதற்கான வாய்ப்பு சபைக்கு கிடைக்காதது குறித்து மனம் வருந்துவதாக மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்தது. மாநிலங்களவையின் புதிய தலைவராக சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று தனது பணியை தொடங்கிய நிலையில், பிரதமர் மோடி, மாநிலங்களவைத் துணைத்தலைவர் ஹரிவன்ஷ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் அவருக்கு தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து உரையாற்றினர். மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது உரையில், “மாநிலங்களவைத்...
பான் மசாலா போன்ற பொருட்களுக்கு புதிய வரி விதிப்பு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல்
இந்தியாவில் நான்கு அடுக்குகளாக இருந்த ஜி.எஸ்.டி வரி விகிதம் 5, 18 என, இரு அடுக்குகளாக மாற்றப்பட்டது. அதே நேரத்தில், சிகரெட், புகையிலை பொருட்கள் உள்ளிட்ட சில பொருட்களுக்கு மட்டும், 40 சதவீத சிறப்பு வரி விதிக்கப்பட்டது. இந்த புதிய நடைமுறை, கடந்த செப்டம்பர் 22-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. இதன் பிறகு, கார், ஏசி, வாஷிங் மெஷின், டிவி விற்பனை அதிகரித்துள்ளது. தற்போது, தீங்கு விளைவிக்கும் பொருட்களின் விலைகள் குறையாமல் நடவடிக்கை எடுக்க மத்திய...