தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் நடைபெற்று வரும் SIR பணிகள் தொடர்பாக மாநில நிர்வாகிகளுடனான ஆலோசனையை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று டெல்லியில் நடத்தினார். இதில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் வேணுகோபால் உள்பட பலர் பங்கேற்றனர். அப்போது மல்லிகார்ஜூன கார்கே பேசியதாவது: சிறப்பு தீவிர திருத்தம் செயல்முறை நடைபெற்று வரும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த அகில இந்திய காங்கிரசின் பொதுச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் செயலாளர்களுடன்...