திருப்பரங்குன்றத்தில் வெளியூர்காரர்களால்தான் பதற்றமான சூழல் உள்ளது என திமுக எம்எல்ஏ கோ.தளபதி தெரிவித்துள்ளார். மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் முன், கோ.தளபதி எம்எல்ஏ மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது கோ.தளபதி எம்எல்ஏ கூறியதாவது: திருப்பரங்குன்றம் மலையடிவாரத்தில் பூர்வீகமாக வாழ்ந்து வருகிறோம். எங்களுக்குள் எந்த பிரச்சினையுமில்லை, ஒற்றுமையுடன் வாழ்கிறோம். ஃப்வ்வெளியூர்க்காரர்கள் தான் இங்கு வந்து பிரச்சினையை ஏற்படுத்துகின்றனர். எனக்கு 72 வயதாகிறது. உச்சி பிள்ளையார் கோயிலில் முதலில் விளக்கு ஏற்றினர்.பின்னர், கிராம மக்கள்...
Tag: Thirupparankundram
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெகவின் நிலைப்பாட்டை தெளிவாக தெரிவிக்க வேண்டும்: தவெகவிற்கு பாஜக கேள்வி
பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபத்தை ஏற்றவே விடமாட்டோம் என்று திட்டமிட்டு சதி செய்து, சட்டத்தை மீறி நீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் வகையில், சிறுபான்மை வாக்கு வங்கிக்காக, மிகப் பெரிய அராஜகத்தை தமிழக அரசு செய்தது மன்னிக்க முடியாதது. திமுக அரசின் தூண்டுதலின் பேரில், தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் மதக் கலவரத்தை தூண்டும் வகையில் பேசி வருவது கண்டிக்கத்தக்கது. திட்டமிட்டு மதக் கலவரத்தை தூண்டும் வகையில் திமுக கூட்டணி...
கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டுமே தவிர காவி தீபம் ஏற்றப்படக்கூடாது: அமைச்சர் கோவி செழியன்
கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டுமே தவிர காவி தீபம் ஏற்றப்படக்கூடாதுஎன உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி செழியன் தெரிவித்துள்ளார். தஞ்சையில் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன், சட்டத்தின்படி எந்த நெறிமுறைகள் இருந்ததோ அதை முதலமைச்சர் செயல்படுத்தினார். தமிழகத்தில் மக்களிடையே, ஆன்மிகம் என்ற பெயரால் மதத்தின் பெயரில் ஒரு தீயை உருவாக்க நினைத்ததை தமிழக முதல்வர் முறியடித்துள்ளார்.அதன்படியே மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர்களும் செயல்பட்டனர்....