இந்தியா, கனடா இடையே யுரேனியம் விநியோக ஒப்பந்தம் இறுதியாகும் நிலையில் உள்ளதாக கூறப்படும் நிலையில், இதற்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தமே முழுக் காரணம் என்று காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். தென்னாப்பிரிக்காவில் சமீபத்தில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, கனடா பிரதமர் மார்க் கார்னியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பை அதிகரிக்கவும், 2030-க்குள் இருதரப்பு வர்த்தகத்தின் மதிப்பை 50 பில்லியன் டாலராக இரட்டிப்பாக்கும்...