முஸ்லிம்கள் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என கேரள மாநில பாஜக தலைவர் ராஜிவ் சந்திரசேகர் வெளிப்படையாக கூறியுள்ளார். கோழிக்கோடு பத்திரிகையாளர் மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்வில் ராஜீவ் சந்திரசேகர் கலந்துகொண்டார். மத்திய அமைச்சரவையில் முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லாததற்கு முக்கிய காரணம் முஸ்லிம்கள் பாஜகவுக்கு வாக்களிக்காததுதான் என்று அவர் கூறியுள்ளார். அவர் பேசியதாவது, “பாஜகவுக்கு வாக்களித்தால்தான் முஸ்லிம் எம்.பி.க்கள் இருக்க முடியும். முஸ்லிம் எம்.பி.க்கள் இல்லாதபோது முஸ்லிம் அமைச்சர்கள் எப்படி இருக்க முடியும்? காங்கிரஸ் கட்சிக்கு தொடர்ந்து...