19 வயதுக்குட்பட்டோருக்கான ஜூனியர் ஆண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. 16-வது ஐ.சி.சி. ஜூனியர் ஆண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) அடுத்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் ஜிம்பாப்வே மற்றும் நமிபியாவில் நடைபெற உள்ளது. 16 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிக்கான அட்டவணையை ஐ.சி.சி. வெளியிட்டது. இதில் பங்கேற்றுள்ள அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்களது பிரிவுகளில் இடம்பெற்றுள்ள மற்ற அணிகளுடன் தலா...