Site icon Metro People

மொழி,கலாச்சாரத்தை காப்பதில் தமிழர்கள் முதலிடத்தில் உள்ளனர் : உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா பேச்சு!

மொழியையும், கலாச்சாரத்தையும் காப்பதில் தமிழர்கள் முதலிடத்தில் உள்ளதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா தெரிவித்துள்ளார்.சென்னை உயர்நீதிமன்ற கூட்ட அரங்கில் நடைபெற்ற புதிய நீதிமன்ற கட்டிட திறப்பு மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்று பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா,’நாட்டின் கலாச்சார தலைநகரங்களில் ஒன்று சென்னை நான் சிறுவனாக சென்னை வந்த போது, தமிழகத்தில் மொழிப் போராட்டம் பெரிய அளவில் நடந்து கொண்டு இருந்தது.தமிழர்கள் மொழி, அடையாளம் பெருமை மிக்கவர்கள். மொழி, கலாச்சாரத்தை காப்பாற்றுவதில் தமிழர்கள் முன்னிலையில் உள்ளனர்.நீதித்துறையை வலுப்படுத்துவதில் சென்னை வழக்கறிஞர்களின் பங்கு முக்கியமானது. நீதிமன்றம் தங்கள் உரிமையை பாதுகாக்கும் என மக்கள் நம்புகின்றனர். அதனை நீதித்துறை பூர்த்தி செய்யும்.

வேகமான இந்த உலகில் மற்றவைபோல நீதியையும் வேகமாக எதிர்பார்க்கிறார்கள்.நீதியை வேகமாக எதிர்பார்த்தால் உண்மையான நீதிக்கு பாதிப்பு ஏற்படும்.அரசியல் சாசன கடமையை நிறைவேற்றுவது என்பது சுமையான பணியாகும். அதை சிறப்பாக செய்து வருகிறோம்.ஆக்கபூர்வமான தீர்வுகள் காணும் போது நீதிபதிகள் கண்மூடி சட்டத்தை மட்டும் சார்ந்திருக்க முடியாது. தமிழக நீதித்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் அளித்து வரும் ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி.தமிழ்நாடு முதல்வர் சென்னை ஐகோர்ட்டுக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக ஐகோர்ட் தலைமை நீதிபதி என்னிடம் கூறினார்.தமிழ்நாடு வளர்ச்சிக்கு முதல்வர் ஸ்டாலின் உழைத்துக் கொண்டு இருக்கிறார்.நீதித்துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப முன்னுரிமை அளித்து வருகிறேன்.வழக்காடும் மொழி விவகாரத்தில் சில தடைகள் இருந்தாலும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தீர்வு காணப்படும். நீதிபதியாக வர பகுதி, இனம், மொழி உள்ளிட்ட எவையும் தடையாக இருக்கக் கூடாது. உச்சநீதிமன்ற கிளை துவங்குவதை பொறுத்தவரை சக நீதிபதிகளுடன் கலந்து பேசி காணொளி காட்சியின் மூலமா வழக்குகள் விசாரிக்கப்படும்,’என்றார்.

Exit mobile version