Site icon Metro People

‘வலிமை’ படத்தால் ‘காட்பாதர்’ படப்பிடிப்பு நிறுத்தம்

‘வலிமை’ படத்தால் சிரஞ்சீவில் நடிப்பில் உருவாகி வரும் ‘காட்பாதர்’ படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வலிமை’. இந்தப் படத்தின் பிரதான காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்தது. தற்போது வெளிநாட்டில் சண்டைக்காட்சி ஒன்றைப் படமாக்கச் சென்றுள்ளது படக்குழு.

‘வலிமை’ படக்குழுவின் பயணத்தால், மோகன் ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்து வரும் ‘காட்பாதர்’ படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. ஏனென்றால் இரண்டு படங்களுக்குமே ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா பணிபுரிந்து வருகிறார்.

‘வலிமை’ படப்பிடிப்பு முடிவடைந்து ஒரே வாரத்தில் படக்குழு திரும்பிவிடும் என்பதால் வேறொரு ஒளிப்பதிவாளரை வைத்துப் படமாக்க வேண்டாம் என்பதில் இயக்குநர் மோகன் ராஜா உறுதியாக உள்ளார். ஆகையால் ‘காட்பாதர்’ படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Exit mobile version