நம் ஊரில் சாதாரண உணவகங்கள், தேநீர் கடைகளில் போண்டா, பஜ்ஜி, வடை போன்ற பலகாரங்களை அச்சடிக்கப்பட்ட செய்தித்தாள்களில் வைத்துக் கொடுப்பார்கள். சில உணவகங் களில் கைகளைத் துடைக்கவும் இதே செய்தித்தாளையே வைத்திருப் பார்கள்.
அச்சடித்த செய்தித்தாள்களைப் பயன்படுத்துவது சுகாதாரக்கேடு என்பது தெரிந்தும் அதைப் பயன்படுத்தி வருகிறோம். சட்டப்படி இதற்குத் தடை இருந்தும் யாரும் பெரிதாக அதை மதிப்பதில்லை. அச்சடிக்கப்பட்ட காகி தத்தில் பலாகாரங்களை வைத்துச் சாப்பிட்டால் அதில் உள்ள வேதிப்பொருள் வயிற்றுக்குள் சென்று நோய்களை உண்டாக்கும் என்று தெரிந்தும், அதைப் பற்றிக் கவலைப்படாமல் இன்றும் அச்சுக் காகிதங்களைப் பயன்படுத்தி வருகிறோம்.