Site icon Metro People

இந்தியாவில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,033 ஆக உயர்வு : ஒன்றிய சுகாதாரத்துறை

இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,033 ஆக அதிகரித்து உள்ளதாக ஒன்றிய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தென் ஆப்ரிக்காவில் கடந்த மாதம் முதன் முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரசான ‘ஒமிக்ரான்’, குறுகிய நாட்களில் 100 நாடுகளில் பரவி விட்டது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இதன் பாதிப்பு எண்ணிக்கை மிக அதிகமாகி கொண்டே வருகிறது. இந்தியாவிலும் ஒமிக்ரான் ெதாற்று வேகம் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இந்தியாவில் இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இன்று காலை நிலவரப்படி 4,033 ஆக அதிகரித்து உள்ளதாக ஒன்றிய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 1216 பேர் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Exit mobile version