Site icon Metro People

மழைநீர்; தமிழக அரசின் அலட்சியமே காரணம்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

தமிழக அரசு சரியான நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததே மழை தேங்கியதற்கு காரணம் என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டியுள்ளார்.

வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை பகுதியில் பெய்த கனமழை காரணமாக தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளுக்கு மழைநீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்வதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமும் வழங்கினர்.

இன்று வில்லிவாக்கம் பகுதியில் மழை பாதிப்பை ஆய்வு செய்த எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்

அப்போது அவர் கூறியதாவது;

“சென்னையில் கடந்த 3 நாட்களாக மழைநீர் வடியால் இருப்பதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அத்தியாவசியப் பொருட்களான குடிநீர், உணவு, பால் போன்ற பொருட்கள் கிடைக்காததால் மக்கள் கவலை அடைந்துள்ளனர். எனவே தமிழக அரசு பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதல்வரின் ஸ்மார்ட் சிட்டி திட்ட குற்றச்சாட்டிற்கு பதிலளித்த அவர் கூறியதாவது ;

சென்னைக்கு 10 ஆண்டுகளாக ஸ்டாலின் மேயராக இருந்தும் வடிகால் வசதி செய்து தரவில்லை. அதிமுக ஆட்சி காலத்தில்தான் சென்னைக்கு முறையான வடிகால் வசதி கொண்டுவரப்பட்டது. இருப்பினும் தற்போது மழைநீர் தேங்கியதற்கு திமுக அரசின் அலட்சியமே காரணம், ஏன் என்றால் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக ஆகஸ்ட் மாதங்களில் கால்வாய்கள் தூர்வாருவது வழக்கம் அதனை திமுக அரசு கவனம் செலுத்தாததே மழை வடியாமல் இருப்பதற்கு காரணம்.

இவ்வாறு அவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Exit mobile version