Site icon Metro People

நல்லாசிரியர் விருதுக்குப் பரிந்துரைக்க நிபந்தனைகளை வெளியிட்டது தமிழக அரசு

நல்லாசிரியர் விருதுக்கு பள்ளி ஆசிரியர்களைப் பரிந்துரை செய்வது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்டம்பர் 5-ம் நாள் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சிறப்பான கல்விப்பணி ஆற்றிய ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் தேசிய விருது வழங்கப்படும்.

இந்நிலையில், இந்தாண்டு நல்லாசிரியர் தேசிய விருதுக்கு ஆசிரியர்களை பரிந்துரை செய்வது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

 

இந்தாண்டு 386 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட உள்ளது. தகுதியான ஆசிரியர்களைத் தேர்வு செய்ய மாவட்ட, மாநில அளிவில் குழு அமைக்கப்பட்டுள்ளது. விருதுக்கு பரிந்துரை செய்யப்படும் ஆசிரியர் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும்; கற்றல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு மட்டுமே விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசியலில் பங்கு பெற்ற, அரசியல் கட்சிகளுடன் தொடர்புடைய ஆசிரியர்களை பரிந்துரை செய்யக் கூடாது என்றும், கல்வியை வணிக ரீதியாக கருதி செயல்படும் ஆசியர்களை பரிந்துரை செய்யக் கூடாது என்று வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version