மும்பை: இந்தியன் ஆயில் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் (யுடிடி) 6-வது சீசன் போட்டி வரும் மே 29 முதல் ஜூன் 15 வரை அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் கலந்து கொள்ளும் 8 அணிகளுக்கான வீரர், வீராங்கனைகளின் ஏலம் மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில் சீசன் 3 சாம்பியனான சென்னை லயன்ஸ் அணி சீன வீராங்கனையான ஃபேன் ஷிகியை ரூ.19.7 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது. இதன் மூலம் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீராங்கனை என்ற சாதனையை அவர், படைத்தார்.
அவருடன் அட்ரியானா டயஸ் – ரூ.19.3 லட்சம் (கொல்கத்தா தண்டர் பிளேட்ஸ்), அல்வாரோ ரோபில்ஸ் – ரூ.18.1 லட்சம் (பிபிஜி புனே ஜாகுவார்ஸ்), ஜெங் ஜியான் – ரூ.17.2 லட்சம் (கோவா சேலஞ்சர்ஸ்), பெர்னாடெட் சோக்ஸ் – ரூ.15.3 லட்சம் (யு மும்பா டிடி), தியா சித்தாலே – ரூ.14.1 லட்சம் (தபாங் டெல்லி டிடிசி), ஹர்மீத் தேசாய் – ரூ.14 லட்சம் (கோவா சேலஞ்சர்ஸ்) ஆகியோரும் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டனர்.
சென்னை லயன்ஸ் அணி விவரம்: ஃபேன் ஷிகி (சீனா) ரூ.19.7 லட்சம், கிரில் ஜெராசிமென்கோ (கஜகஸ்தான்) – ரூ.12.4 லட்சம், பயாஸ் ஜெயின் – ரூ.11.6 லட்சம், சுதான்ஷு குரோவர் – ரூ.2 லட்சம், ஜெனிபர் வர்கீஸ் – ரூ.2 லட்சம், நிகாத் பானு – ரூ.2 லட்சம்.