Site icon Metro People

பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடிக்கும் த்ரிஷா – வெளியானது போஸ்டர்

கல்கி நாவலை மையமாகக் கொண்டு மணிரத்தினம் இயக்கிய இருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகிறது. அதற்கான பிரமோஷன் வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் இந்த வாரத் தொடக்கத்தில் இருந்து படம் குறித்த செய்திகளையும் கதாபாத்திரங்களையும் அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வகையில் ஆதித்ய கரிகாலன், வந்திய தேவன், நந்தினி ஆகிய கதாபாத்திரங்களின் தோற்றங்களை வெளியிட்டனர்.

 

இதைத்தொடர்ந்து அருள்மொழி வர்மனாக நடிக்கும் ஜெயம் ரவியின் தோற்றத்தை நாளை வெளியிடுகின்றனர். அதேபோல் நாளை மாலை 6:00 மணிக்கு பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Exit mobile version