கோலாலம்பூர்: ஸ்குவாஷ் உலக சாம்பியன்ஷிப் தொடருக்கான ஆசிய அளவிலான தகுதி சுற்று கோலாலம்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் அனஹத் சிங், ஜப்பானின் அகாரி மிடோகி காவாவுடன் மோதினார். இந்த ஆட்டத்தில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய அனஹத் சிங் 11-1, 11-7, 11-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு கால் இறுதியில் ஹாங்காங்கின் ஹெலன் டாங் 11-5, 11-6, 10-12, 11-9 என்ற செட் கணக்கில் இந்தியாவின் தன்வி கன்னாவை தோற்கடித்தார். ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் வீர் சோட்ரானி, மலேசியாவின் முகமது சியாபிக் கமாலுடன் மோதினார். இதில் வீர் சோட்ரானி 9-11, 11-6, 11-6, 11-7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.