Site icon Metro People

பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உயர்வு.. கதிகலங்கும் வாகன ஓட்டிகள்.

பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. தமிழ்நாட்டில் பெட்ரோல் விலை 101.01 ரூபாயைத் தாண்டி விற்பனையாவதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 15 காசுகள் உயர்ந்து 101. ரூபாய் 01 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் ஒரு லிட்டர் டீசலின் விலை 23 காசுகள் அதிகரித்து 96 ரூபாய் 60 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பெட்ரோல், டீசல் விலையை பொறுத்தவரை நடப்பாண்டின் ஜனவரியில் இருந்து தொடர்ந்து விலையேற்றத்தை எண்ணெய் நிறுவனங்கள் மேற்கொண்டன. கடந்த மார்ச் மாத இறுதியில் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100க்கு மேல், டீசல் ரூ.96.60 எட்டியது.

மிக அதிகபட்சமாக மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.108க்கு அதிகமாக விற்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பெட்ரோல் ரூ.103 தொட்ட நிலையில், தமிழக அரசு மாநிலத்திற்கான வரி வருவாயில் ரூ.3 குறைத்து ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி நிதி நிலை அறிக்கையில் அறிவித்தது.

இதனால், மாநிலம் முழுவதும் பெட்ரோல் விலை ரூ.103ல் இருந்து 100 ரூபாய்க்கு கீழ் விற்பனையானது. கடந்த மாதத்தில் அதிக அளவில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. இந்த நிலையில் கடந்த 10 நாட்களில் தினமும் 15 காசு முதல் 30 காசு வரையில் அதிகரித்து வருகிறது.

பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்ந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையில் கடந்த மூன்று நாட்கள் நிலவரம்

பெட்ரோல் லிட்டர்:

6.10.2021: 100.49
(37காசு உயர்ந்து)

7.10.2021 : 100.86
(15காசு உயர்ந்து)

8.10.2021 : 101.01

டீசல் லிட்டர்:

6.10.2021 : 95.93
(44காசு உயர்ந்து)

7.10.2021 : 96.37
(23காசு உயர்ந்து)

8.10.2021 : 96.60

ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை, மற்றும் பல மாவட்டங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ101க்கு மேல் விற்கப்படுகிறது.

பெட்ரோல் விலையை ஏற்றி மீண்டும் ரூ.101க்கும் மேல் கொண்டு வந்து விட்டதால், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே டீசல் விலை உயர்வு காரணமாக குறைந்த எண்ணிக்கையில் விசைப்படகுகள் மட்டுமே கடலில் மீன்பிடிக்க சென்று வருகிறது. இது மேலும் எண்ணிக்கைகள் குறையும்.

டீசல் விலையும் தொடர்ந்து ஏற்றம் பெற்று வருவதால் அத்தியாவசிய பொருட்களின் விலை பன்மடங்கு உயர வாய்ப்புள்ளது. இதேபோல் ,பெட்ரோல் விலை உயர்வை தொடர்பாக வல்லுநரிடம் கேட்ட பொழுது தற்போது வரை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் இடத்தில் சில பிரச்சனை காரணமாக உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த பிரச்சனை இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஆனால் தேவைகள் அதே நிலைமையில்தான் உள்ளது. தற்போது உற்பத்தி தடைப்பட்டதால் இந்த விலை ஏற்றத்திற்கு காரணம். இந்த நிலைமை விரைவில் இந்த மாதம் இறுதிக்குள் சீரடையும்.

ஏற்கனவே மாநில அரசு மூன்று ரூபாய் குறைத்து இருந்த நிலையில், மத்திய அரசும் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும். ஆனால் இந்த வருவாய் மூலமாகதான் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவிக்கிறார்கள் என கூறப்படுகிறது. அதேபோல் இந்த மாதம் இறுதிக்குள் நிலைமை சீரடையும் என்று தெரிவித்திருக்கிறார்.

இதே நிலைமை தொடர்ந்தால் பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு எதிரொலியாக அத்தியாவசிய பொருள்களின் விலையும் அதிகரிக்கும் நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version