தனது அடுத்த படத்தின் இயக்குநரை முடிவு செய்துள்ளார் விஜய் ஆண்டனி.
தற்போது 25 படங்களில் நடித்து முடித்துவிட்டார் விஜய் ஆண்டனி. அவருடைய நடிப்பில் ‘ககன மார்கன்’ மற்றும் ‘சக்தி திருமகன்’ ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றன. இதில் ‘சக்தி திருமகன்’ திரைப்படம் தான் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி இருக்கும் 25-வது படமாகும்.
இதனிடையே தனது 26-வது படத்தின் இயக்குநரை முடிவு செய்திருக்கிறார் விஜய் ஆண்டனி. இப்படத்தை ‘ஜென்டில்வுமன்’ இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன் இயக்கவுள்ளார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு படப்பூஜையுடன் தொடங்கவுள்ளது. இதற்கான முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
மார்ச் 7-ம் தேதி வெளியாகி விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்ட படம் ‘ஜென்டில்வுமன்’. லிஜோ மோல் ஜோஸ், லாஸ்லியா, ஹரி கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கோவிந்த் வசந்தா இசையமைப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டாலும், வசூல் ரீதியாக எடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.