பீஜப்பூர்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வரும் 21-ம் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்லது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் ஊடக பிரிவு தலைவர் பவன் கெரா கூறும்போது, “மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி 2 நாள் பயணமாக வரும் 21-ம் தேதி அமெரிக்கா செல்கிறார். அங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியினர் மற்றும் வெளிநாட்டு காங்கிரஸ் பிரிவின் நிர்வாகிகளை ராகுல் சந்தித்து பேச உள்ளார்.
இதையடுத்து,பிரவுன் பல்கலைக்கழகத்துக்கு செல்ல உள்ளார். அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பேசும் ராகுல், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாட உள்ளளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.