Site icon Metro People

ட்விட்டர் தளத்தில் ‘வலிமை’, ‘மாஸ்டர்’ சாதனை

ட்விட்டர் தளத்தில் வழக்கமாக நடைபெறும் ஹேஷ்டேக் போட்டிகளில் #Valimai சாதனை புரிந்துள்ளது.

இன்று (ஆகஸ்ட் 23) சமூக வலைதளத்தில் ஹேஷ்டேக் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு ட்விட்டர் தளம் ஜனவரி 1-ம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரையிலான அதிகமாக ட்வீட் செய்யப்பட்ட ஹேஷ்டேகுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் #Valimai ஹேஷ்டேக் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். 2-வது இடத்தை #Master ஹேஷ்டேக் பிடித்துள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். ஆனால், இந்த இடங்களை வைத்து அஜித் – விஜய் ரசிகர்களுக்கு இடையே சண்டையும் நடைபெற்று வருகிறது.

#SarkaruVaariPaata, #AjithKumar, #Thalapathy65, #iheartawards, #rubinadilaik, #bts, #Covind19 மற்றும் #Vakeelsaab ஆகிய ஹேஷ்டேகுகள் வரிசைப்படி அமைந்துள்ளன. இதில் அஜித் மற்றும் விஜய் சம்பந்தப்பட்ட 2 ஹேஷ்டேகுகள் இடம்பெற்றுள்ளன.

தற்போது அஜித் நடித்து வரும் ‘வலிமை’ படமும் இன்னும் வெளியாகவில்லை. இதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடைபெறவுள்ளது. மேலும், விஜய் நடித்து வரும் படத்துக்கு ‘பீஸ்ட்’ என்று பெயரிடுவதற்கு முன்பு #Thalapathy65 என்று அழைத்து வந்தது படக்குழு.

Exit mobile version