நாகசைதன்யா- வெங்கட்பிரபு இணையும் ‘என்சி22’ படத்தில் அரவிந்த்சாமி, சரத்குமார், ப்ரியாமணி மற்றும் பல நடிகர்கள் நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெங்கட்பிரபு இயக்கத்தில் நாகசைதன்யா நடிக்கும் ‘என்சி22’ படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தொடங்கியது. தற்காலிகமாக ‘என்சி22’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். யுவன்சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்நிலையில், இந்தப் படத்தில் அரவிந்த்சாமி, ப்ரியாமணி, சரத்குமார், ப்ரேம்ஜி அமரன், ப்ரேமி விஷ்வானந்த், சம்பத் ராஜ், கிஷோர் உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்ஷன் என்டர்டெயினராக உருவாகும் இப்படம், நாகசைதன்யா இதுவரை கதாநாயகனாக நடித்துள்ள படங்களில் அதிக பொருட்செலவில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.