2025 மார்ச் மாதம் 28ஆம் தேதி, தென்கிழக்கு ஆசியாவிலேயே நிலநடுக்கச் செயல்பாடுகள் அதிகம் உள்ள பகுதியான சகைங் பிளவு (Sagaing Fault) அருகே 7.7 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது மயன்மாரில் பேரழிவுச் சேதத்தை ஏற்படுத்தியது. மோசமான கட்டமைப்பு / வடிவமைப்புகளால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.
குறிப்பாக, வலுவூட்டப்படாத செங்கல் அல்லது தரம் குறைந்த பொருள்களால் ஆன கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. பொருளாதாரக் கட்டுப்பாடுகள், பழமையான கட்டிட விதிமுறைகள் போன்ற காரணிகள் சேதத்தை மேலும் அதிகரித்து, கணிசமான உயிரிழப்புகளை ஏற்படுத்தின