உக்ரைன் – ரஷ்யா போர் மூன்றாம் ஆண்டைக் கடக்கும் நிலையில், அமெரிக்காவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் கையெழுத்தாகியிருக்கும் கனிம வள ஒப்பந்தம் கவனம் ஈர்க்கிறது. போர்ச் சூழல்களைத் தங்களுக்குச் சாதமாக்கிக்கொள்ளும் உத்தியை அமெரிக்கா தொடர்ந்து முன்னெடுக்கும் நிலையில், இந்த ஒப்பந்தமும் அமெரிக்காவுக்குச் சாதகமாக அமையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை செய்த ராணுவ உதவிகளுக்குக் கைமாறாக, உக்ரைனின் கனிம வளங்களை அமெரிக்காவுக்கு அளிக்க வேண்டும் என்று அதிபர் டிரம்ப் பிடிவாதம் காட்டியது உக்ரைனை அதிரவைத்தது. எனினும், தொடர் பேச்சுவார்த்தைகளின் விளைவாக கனிம வள ஒப்பந்தத்துக்கு உக்ரைன் இசைந்திருக்கிறது.