Site icon Metro People

யுபிஏ ஆட்சியில் வாராக் கடனை வசூலிக்க நடவடிக்கை எடுக்கவில்லை: நிர்மலா சீதாராமன்

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (யுபிஏ) ஆட்சியின்போது வங்கிகளின் வாராக் கடனை வசூலிக்க நடவடிக்கை எடுக்கவேயில்லை என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டினார்.

மக்களவையில் திமுக தலைவர் டி.ஆர். பாலு எழுப்பிய கேள்விக்கு எழுத்து மூலமாக அளித்த பதிலில் நிதி அமைச்சர் கூறியதாவது:

இப்போது பிரதமர் மோடி தலைமையிலான அரசுதான் வங்கிகளின் கடனை வசூலிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. குறிப்பாக சிறு சேமிப்பு மூலம் மக்களிடம் நிதி திரட்டி ஏமாற்றிய நிறுவனங்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளன. செயலி மூலமாக நிதி நடவடிக்கையில் ஈடுபடும் நிறுவனங்களை ரிசர்வ்வங்கி தொடர்ந்து கண்காணிக்கும் நடவடிக்கையும் மேற்கொள் ளப்பட்டுள்ளது.

வங்கிகளின் வாராக் கடனை தள்ளி வைப்பது என்பது அந்த கடனை முழுவதுமாக ரத்து செய்து விட்டதாக அர்த்தமல்ல. வங்கிகள் ஒவ்வொரு கடனாளியிடமிருந்தும்வர வேண்டிய கடன் தொகையைவசூலிக்கும் நடவடிக்கையைதொடர்ந்து மேற்கொண்டுதானி ருக்கும்.

10 ஆயிரம் கோடி வசூல்

சுமார் ரூ.10 ஆயிரம் கோடிக்கும் மேலாக வாராக் கடன் வசூலாகியுள்ளது. மோடி தலைமையிலான ஆட்சியில்தான் முதல் முறையாகவங்கிகள் வாராக் கடனை வசூலித்துள்ளன. இதற்கு முந்தைய காங்கிரஸ் தலைமையிலான யுபிஏ ஆட்சியில் வங்கிகளின் வாராக் கடனை வசூலிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Exit mobile version