2028 முதல் சண்டைப் பயிற்சிக்கு ஆஸ்கர் விருது வழங்கப்படும் என அகாடமி அறிவித்துள்ளது. 2027-ல் வெளியான படங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட படத்துக்கு சிறந்த சண்டைப் பயிற்சிக்கான முதல் ஆஸ்கர் விருது வழங்கப்படும் என்று ஆஸ்கர் விருது வழங்கும் அகாடமி அறிவித்துள்ளது. 2028-ல் நடைபெறவுள்ளது 100-வது ஆஸ்கர் விருது விழா என்பது குறிப்பிடத்தக்கது.
சண்டைப் பயிற்சிக்கு ஆஸ்கர் விருது வழங்கப்படுவது இல்லை. சண்டைப் பயிற்சிக்கு ஆஸ்கர் விருது போல, திரைப்பட சண்டைப் பயிற்சி துறைக்கான டாரஸ் வேர்ல்ட் ஸ்டன்ட் விருதுகள் (Taurus World Stunt Awards) உள்ளன.
இந்நிலையில், வரும் 2028-ல் நடைபெறும் 100-வது ஆஸ்கர் விருது விழா தொட்டு சண்டைப் பயிற்சிக்கு ஆஸ்கர் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “சண்டைப் பயிற்சி (ஸ்டன்ட் டிசைனுக்கு) என்று பிரத்யேகமாக ஆஸ்கர் விருதுகளை அகாடமி உருவாக்கியுள்ளது. 2028-ம் ஆண்டு 100வது ஆஸ்கர் விருது விழா தொட்டு இவை வழங்கப்படும். அந்த விழாவில் 2027-ல் வெளியான படங்களில் சிறந்த ஸ்டன்ட் டிசைன் கொண்ட படத்துக்கு விருது வழங்கப்படும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.