Site icon Metro People

4 பந்துகளில் 4 விக்கெட் வீழ்த்தி உலக சாதனை: நெதர்லாந்துக்கு அதிர்ச்சியளித்த அயர்லாந்து

குர்டிஸ் கேம்பரின் அபாரமான பந்துவீச்சால் அபு தாபியில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் ஏ பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது அயர்லாந்து அணி

முதலில் பேட் செய்த நெதர்லாந்து அணி 20 ஓவர்களில் 106 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 107 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி 15.1 ஓவர்களில் 3 விக்ெகட் இழப்புக்கு 107 ரன்கள் சேர்த்து வெற்ற பெற்றது.

இதன் மூலம் ஏ பிரிவு தகுதிச்சுற்றில் அயர்லாந்து அணி 2 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

அயர்லாந்து அணியின் ஆல்ரவுண்டர் குர்டிஸ் ஹேம்பர் 4 ஓவர்கள் வீசிய 26 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றார்.இந்த 4 விக்கெட்டுகளுமே 4 பந்துகளில் ஹேம்பர் வீழ்த்தினார். ஆல்ரவுண்டர் குர்டிஸ் இதற்கு முன் 4 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடியஅனுபவம் உடைவர். இது இவருக்கு 5-வது போட்டியாகும்.அவரின் 5-வது ஆட்டத்திலேயே குர்டிஸ் ஹாட்ரிக் மட்டுமல்லாது, 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

ஹேம்பர் வீசிய 10-வது ஓவரின் 2வது பந்து முதல் 5-வது பந்துவரை தொடர்ந்து 4 விக்கெட்டுகளை சாய்த்து நெதர்லாந்து அணியின் சரிவுக்கு காரணமாகினார். 2-பந்தில் ஆக்கர்மேன்(11), அடுத்துவந்த டஸ்சாட்(0), விக்ெகட் கீபப்ர் எட்வார்ட்ஸ்(0) இருவரும் கால்காப்பில் வாங்கி ெவளியேறினர், 5-வது பந்தில் வேன் டெர் மெர்வ் க்ளீன் போல்டாகி ஆட்டழந்தார். 4 பந்துகளிலும் தொடர்ந்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஹேம்பர் டி20உலகக் கோப்பைப் போட்டியில் புதிய சாதனையை நிகழ்த்தினர்.

இதற்கு முன் டி20 போட்டிகளில் தொடர்ந்து 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை 2 பேர் வீழ்த்தியிருந்தனர். 2019ம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிராக ஆப்கன் வீரர் ரஷித் கானும், 2019ம் ஆண்டு நியூஸிலாந்துக்கு எதிராகஇலங்கை வீரர் மலிங்காவும் வீழ்த்தியிருந்தனர். 3-வதாக அயர்லாந்து வீரர் ஹேம்பர் இணைந்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய 2-வது பந்துவீ்ச்சாளர் எனும் பெருமையையும் ஹேம்பர் பெற்றார். இதற்கு முன் 2007ம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிராக ஆஸி. வேகப்புயல் பிரட் லீ ஹாட்ரிக் வீழ்த்தியதே இதுவரை டி20 உலகக் கோப்பைப் போட்டியில் சாதனையாக இருந்தது.

51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த நெதர்லாந்து அணி அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை எந்த ரன்னும் கூடுதலாக சேர்க்கால் 4-51 என்ற நிலைக்கு தள்ளப்பட்டது.

நெதர்லாந்து அணியி்ல் தொடக்க வீரர் மேக்ஸ் ஓ டோட் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்து 51 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் பீட்டர் சீலர்(21), லோகன் வேக் பீக்(11) ரன்கள் சேர்த்தனர். மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் ஒற்றை இலக்கரன்னில் ஆட்டமிழந்தனர். இதில் தொடக்க ஆட்டக்கார்ர மேக்ஸ் அடித்த 51 ரன்களைக் கழித்துப் பார்த்தால் நெதர்லாந்து அணியின் மற்ற வீரர்கள் சேர்ந்து சேர்த்தது 55 ரன்கள் மட்டும்தான்.

அயர்லாந்து அணியி்ல் குர்டிஸ் ஹேம்பர் தவிர, மார்க் ஆதிர் 4 ஓவர்கள் வீசி 9 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.

107 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் அயர்லாந்து அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களில் கெவின் ஓ பிரையன்(9) அடுத்து களமிறங்கிய கேப்டன் பால்பிரின்(8) ரன்னில் ஏமாற்றினர். ஆனால், தொடக்க நிலையில் களமிறங்கிய மற்றொரு அனுபவவீரர் பால் ஸ்டிரிங் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 30 ரன்கள் சேர்த்தார்.

3-வது விக்கெட்டுக்கு பால் ஸ்டிங், டிலானை இருவரும் சேர்ந்து 59 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். டிலான் 44 ரன்களில் ஆட்டமிழந்தார். குர்டிஸ் ஹேம்பர் 7, பால்ஸ்டிங் 30 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

Exit mobile version