குருவாயூர் கோயில் தேவஸ்தானத்திற்கு ரூ.15 கோடி நன்கொடையை பிரபல தொழிலதிபரும் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவருமான முகேஷ் அம்பானி வழங்கியுள்ளார்
ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி கேரளாவில் உள்ள குருவாயூர் கோயில் தேவஸ்தானம் கட்டும் மருத்துவமனைக்கு நன்கொடை வழங்கினார்.
குருவாயூர் கோயிலுக்கு சென்ற முகேஷ் அம்பானிக்கு தேவஸ்தான தலைவர் வி.கே. விஜயன் வரவேற்பு அளித்தார். பின்னர் முகேஷ் அம்பானி சாமி தரிசனம் செய்தார்.தொடர்ந்து தேவஸ்தானம் சார்பில் கட்டப்பட்டுவரும் பன்நோக்கு மருத்துவமனையின் கட்டுமான பணிக்காக 15 கோடி ரூபாயை முகேஷ் அம்பானி நன்கொடையாக வழங்கினார். அதனை தேவஸ்தான தலைவர் வி.கே. விஜயன் பெற்றுக்கொண்டார்.
இதே போல திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முகேஷ் அம்பானி வழிபட்டார். அதிகாலை கோயிலுக்கு வந்த முகேஷ் அம்பானி, சுப்ரபாத சேவையில் பங்கேற்று ஏழுமலையானை வணங்கினார்.

Leave a Reply