திருவண்ணாமலை வேங்கிக்காலில் கற்பகம் கூட்டுறவு சிறப்பு அங்காடி சுயசேவை பிரிவை அமைச்சர் எ.வ.வேலு நேற்று மாலை திறந்துவைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 72வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழாவையொட்டி வரும் 20ந்தேதிவரை ஒருவாரம் கூட்டுறவு வாரவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி திருவண்ணாமலை வேங்கிக்காலில் கற்பகம் கூட்டுறவு சிறப்பு அங்காடி சுயசேவை பிரிவு துவக்கிவிழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் தலைமை தாங்கினார்.
துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி முன்னிலை வகிக்க மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் எஸ்.பார்த்திபன் அனைவரையும் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட அமைச்சர் எ.வ.வேலு அனைத்து வகையான மளிகை பொருட்கள் மற்றும் அழகுசாதன பொருட்கள் குறைந்தவிலையில் நுகர்வோர்களுக்கு கிடைக்கும் வகையில் கூட்டுறவு சிறப்பு அங்காடி சுயசேவை பிரிவை ரிப்பன் வெட்டி திறந்துவைத்து குத்துவிளக்கேற்றி விற்பனையை துவக்கிவைத்தார்.
இந்த விழாவில் திமுக மாநகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன் மாவட்ட பொருளாளர் எஸ்.பன்னீர்செல்வம் முன்னாள் நகரமன்ற தலைவர் இரா.ஸ்ரீதரன் துணைப்பதிவாளர்கள் ஏ.பிரான்சிஸ் சகாய ஆரோக்கியமேரி வினோத் சந்திரசேகரன் கோவிந்தராஜூலு கூட்டுறவு சார்பதிவாளர் எஸ்.சந்தியா மேலாளர்கள் எஸ்.ஆதிமூலம் ஏ.கே.மாசிலாமணி கே.மாசிலாமணி ஜெ.சிவக்குமார் கே.தினகரன் எஸ்.தங்கதுரை தொழிற்சங்க பிரதிநிதிகள் ஜெ.அருணகிரி பி.பாண்டியன் ஆர்.சேகர் ஆர்.மகாதேவன் உள்பட கூட்டுறவு துறை அலுவலர்கள் பணியாளர்கள் மகளிர் சுயஉதவிக்குழுவினர் பொதுமக்கள் கலந்துகொண்டனர். முடிவில் கூட்டுறவு மேலாண்மை இயக்குநர் எஸ்.சுரேஷ்குமார் நன்றி கூறினார்.

Leave a Reply