திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு, அடுத்த இஞ்சிமேடு, வரதராஜ பெருமாள் கோவில் சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு சுவாதி நட்சத்திர மகாயாகம் நடந்தது. காலையில் வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, தாயார் பெருந்தேவி தாயார், சக்கரத்தாழ்வார், சீதாதேவி, லட்சுமி நரசிம்மர், ஆகிய சாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்து, வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.
இதைத்தொடர்ந்து கோவில் யாகசாலை மண்டபத்தில் வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி,பூதேவி, தாயாரை பல்வேறு வண்ண மலர்களால் அலங்காரம் செய்து வைத்து, பல்வேறு வண்ண அரிசி மூலம் சுவாதி நட்சத்திர மகா கோலம் வரையப்பட்டு, பல்வேறு மூலிகைகள் மூலம் திருமண தடை நீங்க, கடன் தொல்லை தீர, குழந்தை வரம், ஆகியவைகளுக்காக மகாயாகம் நடந்தது.
இதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், செஞ்சி ,சேத்துப்பட்டு, ஆரணி, வேலூர், ஆகிய நகரப் பகுதிகளிலிருந்தும், சுற்றுப்புற கிராமங்களிலும் ஏராளமான பக்தர்களுக்கு கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்க சடகோப கைங்கரிய சபா நிர்வாகி பாலாஜி, பட்டர் செய்திருந்தார்.

Leave a Reply