திருவண்ணாமலையில் ஐமேத் அபாகஸ் சார்பில் அபாகஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு நடிகர் தாமு பரிசுகளை வழங்கினார்.

திருவண்ணாமலை உள்பட 15 இடங்களில் இயங்கி வரும் ஐமேத் எனும் நிறுவனம் மாணவ-மாணவியர்களின் கணித திறனை மிக குறுகிய காலத்தில் மேம்படுத்திடும் வண்ணம் அபாகஸ் வகுப்புகளை சிறப்பாக நடத்தி வருகிறது. இந்நிறுவனம் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், தஞ்சாவூர், காரைக்கால் மற்றும் திருவண்ணாமலை உள்பட 15 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட 8-வது மாவட்ட அளவிலான அபாகஸ் போட்டியை நடத்தியது. இப்போட்டியில் 1622 மாணவ-மாணவியர்கள் பங்கேற்றனர். இதில் 1179 பேர் வெற்றி பெற்றனர்.
இவர்களுக்கு 2 கட்டங்களாக பரிசுகள் வழங்கப்பட்டன. முதல் கட்டத்தில் 589 பேர்களுக்கு கவிஞர் சினேகன் பரிசுகளை வழங்கினார்.
மேலும் 590 பேர்களுக்கு அவலூர்பேட்டை சாலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நேற்று பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு வந்தவர்களை ஐமேத் அபாகசின் நிறுவனர் சுதா கார்த்திகேயன் வரவேற்றார். நிறுவனர் சக்தி தினகரன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சினிமா நடிகர் தாமு கலந்து கொண்டு அபாகஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சுழற்கோப்பை, பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வாங்கினார். அவர் பேசுகையில், மாணவ மாணவியர்கள் வழக்கமான பயிற்சியை விட அபாகஸ் பயிற்சியின் மேன்மை கருத்தை புரிந்து கொள்வதுடன் ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொள்கிறார்கள். அவர்களுக்கு அபாகஸ் ஒரு வலுவான கல்வி அடித்தளத்தை அமைத்து தருகிறது. ஒவ்வொரு மாணவர்களையும் கல்வியில் சிறந்து விளங்க செய்யும் பணியில் சிறப்பாக ஈடுபட்டு வரும் ஐமேத் நிறுவனத்திற்கு வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். இந்த விழாவில் மாணவ – மாணவிகள், பெற்றோர்கள் ஆசிரிய-ஆசிரியைகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Leave a Reply