பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் உயர்த்தி உள்ளன.

ஊரடங்கு தளர்வுக்குப் பிறகுகடந்த ஜனவரி முதல் எண்ணெய்நிறுவனங்கள் படிப்படியாக விலையை உயர்த்தின. இதனால்,வடமாநிலங்களில் 1 லிட்டர் பெட்ரோல் ரூ.100-ஐத் தாண்டியது.

இந்நிலையில், 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பு வெளியானதில் இருந்து பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படாமல் இருந்தது.

தற்போது தேர்தல் முடிந்துள்ள நிலையில், விலை மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டருக்கு 12 காசு உயர்ந்து ரூ.92.55-க்கும், டீசல் லிட்டருக்கு 15 காசு உயர்ந்துரூ.85.90-க்கும் விற்கப்பட்டது.