தொலைநோக்குப் பார்வையுடன் சென்னையின் வளர்ச்சிக்குப் பங்களித்தது திமுக அரசு என்று சென்னை தினத்தில் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் தலைநகரான சென்னையின் நீண்ட பாரம்பரியத்தைச் சிறப்பிக்கும் வகையில் ‘சென்னை தினம்’ ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 22ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று 382-வது சென்னை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு சென்னை மாநராட்சியின் ரிப்பன் மாளிகை உள்ளிட்ட அனைத்துக் கட்டிடங்களும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

அதை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,

’’சீர்மிகு, சிங்கார – வந்தாரை வாழவைக்கும் தருமமிகு சென்னை, பல அடையாளங்களுக்கும் சிறப்புகளுக்கும் சொந்தமானது.

தொலைநோக்குப் பார்வையுடன் சென்னையின் வளர்ச்சிக்குப் பங்களித்தது திமுக அரசு; இனியும் தொடரும்.

சென்னை மாநகர மக்களுக்கு சென்னை நாள் (Madras Day) வாழ்த்துகள்!’’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மெட்ராஸ் 1996 ஜூலை 17 அன்றுதான் சென்னை எனப் பெயர் மாற்றம் பெற்றது குறிப்பிடத்தக்கது.