சரக்கு ரயில் சேவை மூலம் முதல் காலாண்டில் தெற்கு ரயில்வேக்கு ரூ.992 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

தெற்கு ரயில்வே சென்னை, திருச்சி, மதுரை, பாலக்காடு, திருவனந்தபுரம், சேலம் உள்ளிட்ட கோட்டங்களை உள்ளடக்கியது. இந்தக் கோட்டங்கள் மூலம் சரக்கு ரயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. தெற்கு ரயில்வேயில் முக்கியமாக அரிசி, சிமென்ட், மேட்டார் வாகனங்கள் ஆகியவை சரக்கு ரயில் மூலம் ஓர் இடத்தில் மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லப்படும்.

இந்நிலையில், சரக்கு ரயில் போக்குவரத்து மூலம் முதல் காலாண்டில் ரூ.992 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தெற்கு ரயில்வே சார்பில் தெரிவித்துக்கப்பட்டுள்ளது. இதன்படி 2022 – 2023ம் ஆண்டின் முதல் காலாண்டில் 9.98 மில்லியன் டன் சரக்குகளை தெற்கு ரயில்வே கையாண்டுள்ளது.