குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பாக ஐந்து மாநிலங்களில் தேர்தல் முடிந்த பிறகே குழு அமைக்கப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது’ என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி, மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்ற சமயத்தில், விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்துக்கு சட்ட ரீதியிலான உத்தரவாதம் வழங்குவது தொடர்பாக முடிவு செய்ய தனி குழு அமைக்கப்படும் என்று உறுதியளித்தார்.

இது தொடர்பாக நேற்று மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டபோது, அதற்கு மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பதிலளித்தார். அவர் கூறுகையில், ‘ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்ற உள்ள நிலையில், குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பாக குழு அமைப்பது குறித்து தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலுக்காக மத்திய அரசு தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியது. அதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், தேர்தல் முடிந்த பிறகுதான் அந்தக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று அறிவுத்தியுள்ளது’ என்று அவர் தெரிவித்தார்.