என்எல்சி இந்தியா நிறுவனத்தில் பொறியாளர் உள்ளிட்ட பல் வேறு பணியிடங்ளுக்காக நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வில் தமிழக இளையோர் புறக்கணிக்கப் பட்டதைக் கண்டித்தும், தேர்வைரத்து செய்யக் கோரியும் நெய்வே லியில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்பி ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கி பேசியது:
என்எல்சி இந்தியா நிறுவனம் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம். கடலூர் மாவட்டங்களை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் என்எல்சி நிறுவனத்தின் வளர்ச்சிக்காக தங்கள் வீடு, நிலங்களை கொடுத்து தற்போது வாழ்வதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர்.
என்எல்சி நிறுவனத்தில் தொடர்ச் சியாக கடந்த 5 ஆண்டுகளாக வடமாநில இளைஞர்களை பணி யில் அமர்த்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போது நடைபெற்ற பொறியாளர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கான எழுத்துதேர்வில் 1.582 பேர் தேர்வு பெற்றுள்ளனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த8 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். இந்தத் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந் துள்ளன. எனவே இந்தத் தேர்வைரத்து செய்து மறுதேர்வு நடத்தவேண்டும்.
தமிழக இளைஞர் களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.என்எல்சி நிறுவனத்தின் லாபத்தை பாஜக ஆளும் வட இந்திய மாநிலங்களில் என்எல்சி நிறுவனம் முதலீடு செய்துள்ளது. அதனை உடனடியாக நிறுத்த வேண்டும். தமிழகத்தில் தொழில் வளம் பெருகும் வகையில் மத்திய அரசு முதலீடு செய்ய முன்வர வேண்டும்.குறிப்பாக என்எல்சி நிறுவனத்தின் ஒப்பந்ததாரர் வடஇந்திய தொழிலாளர்களை என்எல்சி நிறுவனத்தின் பணிக ளுக்கு ஈடுபடுத்தும் போக்கை என்எல்சி நிர்வாகம் உடனடியாக கைவிட வேண்டும்.
வட இந்தியர் என்பதற்காக எதிர்க்கவில்லை, நெய்வேலி எங்கள் தமிழ் மண்; இதில் எங்க ளுக்கு உரிமை உண்டு,தமிழகத்தில் நிறுவனம் இயக்க நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை தர வேண்டும். வாய்க்கு வந்ததை எல்லாம் வாக்குறுதியாக தரும் உலக மகா நடிகர் மோடி, இது மோடிசர்க்கார் அல்ல, அதானி சர்க்கார்- ஒரே தேசம் ஒரே கலாச்சாரம் என்பதுபன்முகத் தன்மைக்கு எதிரானது.
‘தமிழர்களுக்கு முன்னுரிமை’ என்ற குரல் எந்த வகையிலும் தேச ஒற்றுமையை சீர் குலைக்காது. இவ்வாறு பேசினார்.
இந்தப் போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன், கடலூர் நாடா ளுமன்ற தொகுதிச் செயலாளர் தாமரை செல்வன், மாவட்ட செயலாளர் மருதமுத்து உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
போராட்டத்தில் பங்கேற் றவர்கள் என்எல்சி எழுத்துத் தேர்வுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.