தமிழகத்தில் 8 மாதங்களில் 2,398 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய,மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. இதற்கிடையில், ஏடிஸ் கொசுக்களின் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளதால் டெங்கு காய்ச்சலும்பரவி வருகிறது. கடந்த 8 மாதங்களில் தமிழகத்தில் 2,398 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, இந்த ஆண்டில் 74 பேர் சிக்குன்குனியா, 380பேர் மலேரியா, 254 பேர் லெப்டோஸ்பிரோசிஸ் எனப்படும் எலிக்காய்ச்சல், 835 பேர் ஸ்கரப் டைபஸ்எனப்படும் பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து சுகாதாரத் துறைஅதிகாரிகள் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவும், காய்ச்சல் முகாம்களில் கரோனாவுடன், டெங்கு, ஜிகா,சிக்குன்குனியா, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் கண்டறியப்பட்டால் உடனடியாக தெரிவிக்கவும் மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கரோனா தடுப்புநடவடிக்கையில் ஈடுபட்டுள்ள களப் பணியாளர்கள், டெங்குதடுப்பு பணியிலும் கவனம் செலுத்தஉத்தரவிடப்பட்டுள்ளது.

டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சைஅளிக்கத் தேவையான மருந்துகள், வசதிகள் போதிய அளவு உள்ளன. மழை பெய்த பிறகு சாலைகள், தெருக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்கநடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

டயர், உடைந்த மண்பாண்டம், தேங்காய் சிரட்டை, பெயின்ட்டப்பா, தேவையற்ற பிளாஸ்டிக்பொருட்கள் மற்றும் கட்டுமானஇடங்களில் தேங்கும் தண்ணீரில்கொசுக்கள் உற்பத்தி ஆகக்கூடும்.எனவே, அப்பொருட்களை உடனடியாக அகற்ற வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.