சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்டது திமுகவா? அதிமுகவா? என கடும் விவாதம் தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்றது.

ஒரே இணைப்பில் தொலைக்காட்சி, தொலைபேசி மற்றும் இணையதள சேவைகள் என மூன்று டிஜிட்டல் சேவைகளை வழங்க ஒன்றிய அரசின் ரூ.1815.31 கோடி நிதி உதவியுடன் பாரத்நெட் திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது.

மத்தியய அரசின் பாரத்நெட் திட்டமானது, அனைத்து ஊராட்சிகளையும் கண்ணாடி இழை கம்பிவடம் ( Optical Fibre Cable ) கொண்டு இணைத்து அதிவேக அலைகற்றை வழங்கும் திட்டமாகும். இத்திட்டத்தினை ரூ.1815.31 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து ஒப்புதல் வழங்கியுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், பணி ஆணை வழங்கிய ஓராண்டு காலத்திற்குள் நான்கு தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு 388 வட்டாரங்களில் 12,525 கிராம பஞ்சாயத்துகளுக்கு 43,004 கி.மீ தூரத்திற்கு உயர்மட்ட கம்பத்தின் வழியாகவும், 6,496 கி.மீ தூரத்திற்கு நிலத்தடி வழியாகவும் கண்ணாடி இழை கம்பிவட இணைப்பு செயல்படுத்தப்படும்.

மேலும், பாரத்நெட் திட்டத்துடன் கூடுதலாக தமிழ்நெட் எனும் திட்டத்தின் மூலம் அனைத்து பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் மற்றும் மாவட்ட தலைமை இடங்களை கண்ணாடி இழை கம்பிவடம் மூலம் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பாரத்நெட் அமைப்பின் மூலம் ஒரே இணைப்பில் தொலைக்காட்சி, தொலைபேசி மற்றும் இணையதள சேவைகள் என மூன்று டிஜிட்டல் சேவைகளை வழங்க முடியும்.

இதன் மூலம் அரசு அலுவலகங்கள், பொது நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் அதிவேக அலைக்கற்றையை பயன்படுத்தி கிராமப்புறங்களில் வேலை வாய்ப்பு மற்றும் சேவைகளை ஏற்படுத்துவதன் மூலம் சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்கு வழிவகுக்கும் என தகவல் தொழில்நுட்பவியல் துறை கொள்கை விளக்க குறிப்பில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.