சுப்ரமணிய பாரதியாரின் தமிழ் தேசபக்திப் பாடலை அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த சகோதரிகள் பாடுவதைப் பார்த்து பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இதைக் கண்டபோது நான் பெருமகிழ்ச்சியும் உவகையும் அடைந்தேன். ‘ஒரே இந்தியா உன்னத இந்தியா’ கோட்பாட்டை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் வகையில் தமிழில் பாடியுள்ள அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்த இளைஞர் சக்தியின் நட்சத்திரங்களுக்கு எனது பாராட்டுக்கள்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த சகோதரிகள் பாடும் “பாருக்குள்ளே நல்ல நாடு” என்ற பாரதியாரின் தேசபக்தி பாடலை, அருணாச்சலப் பிரதேச மாநில முதல்வர் பெமா காண்டு, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.