தினத்தந்தி நிறுவனர் சி.பா.ஆதித்தனாரின் 117 ஆவது பிறந்த நாளான இன்று அரசு விழாவாக கொண்டாடப்படுகின்றது. இதழியல் துறையில் இவர் எண்ணற்ற சாதனைகளை படைத்துள்ளார்.உலகம் போற்றும் சாதனைகளுக்கு சொந்தக்காரரான அவரை போற்றும் விதமாக தமிழக வாகன ஓட்டுநர் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.