தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் மிகச்சிறப்பான ஆட்சியை முதல்வர் ஸ்டாலின் வழங்கி வருகிறார். அவர் கடுமையாக உழைத்து வருகிறார். உலகளவில் மிகச்சிறந்த அரசியல்வாதியாக ஸ்டாலின் திகழ்கிறார்.
தேர்தல் நேரத்தில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளில், பெரும்பாலானவற்றை முதல்வர் நிறைவேற்றியுள்ளார். மீதமுள்ள வாக்குறுதிகளையும் அவர் நிச்சயம் நிறைவேற்றுவார்.
100 சதவீதம் எதிர்ப்பு
மேகேதாட்டு அணை பிரச்சினையில் கர்நாடகாவுக்கு எங்களின்100 சதவீதம் எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கிறோம். இப்பிரச்சினையில் தமிழக முதல்வர் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் நாங்கள் முழு ஒத்துழைப்பை தருவோம்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் முன்புஓ.பன்னீர்செல்வம் இதுவரை ஆஜராகவில்லை. பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாதது ஏன் எனத் தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.