நகர்ப்புற சேவைகளை குடிமக்கள் தங்கள் இல்லங்களிலேயே பெறுவதை உறுதிப்படுத்தும் வகையில், நமது சேவையில் நகராட்சி; மக்கள் சேவையில் மாநகராட்சி என்ற திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்த அறிவிப்பில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை வெளியிட்டுள்ள கொள்கை விளக்கக் குறிப்பில், நகர்ப்புர சேவைகளை குடிமக்கள் தங்கள் இல்லங்களிலேயே பெறுவதை உறுதிப்படுத்தும் வகையில், நமது சேவையில் நகராட்சி; மக்கள் சேவையில் மாநகராட்சி என்ற திட்டத்தை இந்த அரசு செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
சென்னை சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் இதுவரை 599 கோடி ரூபாய் மதிப்பிலான 37 பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், 308 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5 பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், சென்னை உள்ளிட்ட 11 மாநகராட்சிகளிலும் சீர்மிகு நகரத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், திட்டத்துக்கான காலம் 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை வெளியிட்டுள்ள கொள்கை விளக்கக் குறிப்பில், தெரிவிக்கப்பட்டுள்ளது.