உச்ச நீதிமன்றத்தில் காலியாக இருக்கும் 9 நீதிபதிகள் இடங்களை நிரப்புவதற்கு தேர்வு செய்யப்பட்ட 3 பெண் நீதிபதிகள் உள்பட 9 நீதிபதிகளில் ஒருவராக இருக்கும் நீதிபதி நாகரத்னா 2027-ம் ஆண்டில் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் பி.வி.நாகரத்னா 2027ம் ஆண்டில் தலைைம நீதிபதியாக நியமிக்கப்பட்டால் இந்திய நீதித்துறை வரலாற்றிலேயேமுதல் பெண் தலைமைநீதிபதி எனும் சிறப்பைப் பெறுவார்.

கடந்த 1962-ம் ஆண்டு, அக்டோபர் 30-ம் தேதி பிறந்த பி.வி.நாகரத்னா பிறந்தார். இவரின் தந்தை இஎஸ் வெங்கடராமையாவும் உச்ச நீதிமன்ற தலைமை நீதியாக இருந்தவர், அதாவது கடந்த 1989ம் ஆண்டு ஜூன் முதல் டிசம்பர்வரை 6 மாதங்கள் அவர் பதவியில் இருந்தார்.

பெங்களூருவில் வழக்கறிஞராக இருந்த பி.வி.நாகரத்னா, கடந்த 2008-ம் ஆண்டில் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் கூடுதல் அமர்வு நீதிபதியாக நியமிக்கப்பட்டு 2 ஆண்டுகளில் நிரந்தரமாக்கப்பட்டார்.

நீதிபதி விபி நாகரத்னா

கடந்த 2009-ம் ஆண்டு கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தினகரன் மீதான ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, வழக்கறிஞர்கள் ஒருதரப்பினர் போராட்டம் செய்தனர். அப்போது, நீதிபதிகள் நாகரத்னா, கோபால கிருஷ்ணா கவுடா, தலைமை நீதிபதி பி.டி.தினகரன் ஆகியோரை ஒரு அறையில் வழக்கறிஞர்கள் பூட்டி வைத்தனர் பின்னர் போராட்டத்துக்குப்பின் மூவரும் விடுவிக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்துக்குப்பின் துணிச்சலாகப் பேட்டி அளித்த நீதிபதி நாகரத்னா, “ இதற்கெல்லாம் கோழையாக இருந்துவிடமாட்டேன். அரசியலமைப்புச் சட்டத்தின்படி பதவி ஏற்றுள்ளேன். பார்கவுன்சில் வழக்கறிஞர்கள் இதைச்செய்ததால் வெட்கப்படுகிறேன், வேதனைப்படுகிறேன்” எனத் தெரிவித்தார்.

2012-ம் ஆண்டு ஒரு வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி நாகரத்னா, மின்னணு ஊடகங்களை ஒழுங்குபடுத்த கட்டுப்பாடுகள் தேவை என்று தீர்ப்பளித்தார். 2019-ம் ஆண்டு ஒரு வழக்கில் அளித்ததீர்ப்பில், “ கோவில் என்பது வர்த்தக நிறுவனம் அல்ல, ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு கிராஜுவிட்டி வழங்கமுடியாது” என நீதிபதி நாகரத்னா தீர்ப்பளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.