சென்னை: பொது மக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய 5 காவல்துறை அதிகாரிகளுக்கு 2023-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர்களது பணியைப் பாராட்டி சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கம் பெறுவோரின் விவரம்:
1. க. வெங்கடராமன், இ.கா.ப., கூடுதல் காவல் துறை இயக்குநர், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, சென்னை.
2. அஸ்ரா கர்க், இ.கா.ப., காவல்துறை தலைவர்/ கூடுதல் காவல் ஆணையாளர், சட்டம் மற்றும் ஒழுங்கு (வடக்கு), சென்னை பெருநகர காவல்.
3. சு. ராஜேந்திரன், இ.கா.பா., காவல்துறை துணைத் தலைவர், குற்றப்புலனாய்வுத் துறை நுண்ணறிவு, சென்னை.
4. ப.ஹீ. ஷாஜிதா, காவல் கூடுதல் துணை ஆணையாளர், இணையவழி குற்றப் பிரிவு, சென்னை பெருநகர காவல்.
5. ஹா. கிருஷ்ணமூர்த்தி, காவல் துணைக் கண்காணிப்பாளர், தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, சென்னை.
இதே போன்று புலன் விசாரணைப் பணியில் மிகச்சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் 10 காவல் துறை அதிகாரிகள் 2023-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப்பணிப் பதக்கங்கள் வழங்கப்பட தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்கள்:-
காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப்பணிப் பதக்கங்கள் பெறுவோரின் விவரம்:
1. வே. அனில் குமார், காவல் உதவி ஆணையர், கொங்கு நகர் சரகம், திருப்பூர் மாநகரம்.
2. கோ. சரவணன், காவல் துணைக் கண்காணிப்பாளர், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, மதுரை சரகம்.
3. ர. மாதையன், காவல் ஆய்வாளர், சூலூர் காவல் நிலையம், கோயம்புத்தூர் மாவட்டம்.
4. மா. அமுதா, காவல் ஆய்வாளர், பீலமேடு காவல் நிலையம், கோயம்புத்தூர் மாநகரம்.
5. ம. அனிதா, காவல் ஆய்வாளர், மாசார்பட்டி காவல் நிலையம், தூத்துக்குடி மாவட்டம்.
6. இரா. விஜயா, காவல் ஆய்வாளர், அனைத்து மகளிர் காவல் நிலையம், மானாமதுரை, சிவகங்கை மாவட்டம்
7. ஆ. மகாலெட்சுமி, காவல் ஆய்வாளர், அனைத்து மகளிர் காவல் நிலையம், அரியலூர் மாவட்டம்.
8. அ. சித்திராதேவி, காவல் ஆய்வாளர், இணைய குற்றப்பிரிவு, திருப்பூர் மாவட்டம்.
9. ந. மணிமேகலை, காவல் ஆய்வாளர், நில அபகரிப்பு தடுப்பு பிரிவு, சென்னை பெருநகர காவல்.
10. மறைந்த காவல் ஆய்வாளர் கு. சிவா, குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுதுறை, திருச்சிராப்பள்ளி.
விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவருக்கும் தலா எட்டு கிராம் எடையுடன் கூடிய தங்கப்பதக்கமும், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்படும். மேற்கண்ட விருதுகள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் பிறிதொரு விழாவில் வழங்கப்படும்.