சென்னை: சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4-வது ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற உள்ளதால், சென்னை கடற்கரை – சேப்பாக்கம் இடையே பறக்கும் ரயில் சேவை 7 மாதங்கள் ரத்து செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை சென்ட்ரலில் இட நெருக்கடி நிலவுவதால் பலவிரைவு ரயில்கள் எழும்பூரில் இருந்து இயக்கப்படுகின்றன. எனவே, ரயில் போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில், கடற்கரை – எழும்பூர் இடையே 4-வது ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது.
இதற்காக கடற்கரை – சேப்பாக்கம் இடையே பறக்கும் ரயில் சேவை வரும் ஜூலை 1-ம் தேதி முதல் 2024 ஜன.31-ம் தேதி வரை 7 மாதங்களுக்கு ரத்து செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.