தேனி மாவட்டத்தில் உள்ள நகர்ப்புற சுகாதாரம் மற்றும் நலவாழ்வு மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் கீழ் உள்ள தேனி மாவட்ட நலவாழ்வு சங்கம் அறிவித்துள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் பிப்ரவரி 14ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்களை அனுப்பலாம்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

செயற்செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், பல்துறை அலுவலக வளாகம்- 1, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம், தேனி மாவட்டம் 625531

காலிப்பணியிடங்கள் விவரம்:

1. மருத்துவ அலுவலர் – 4

2. பல்நோக்கு சுகாதாரப்பணியாளர் (ஆண்) / சுகாதார ஆய்வாளர் நிலை II – 4

3. மருத்துவமனைப் பணியாளர் – 4

மொத்த காலிப்பணியிடங்கள் – 12

ஒப்பந்த அடிப்படையிலான மாத தொகுப்பூதியம்:

1. மருத்துவ அலுவலர் – ரூ. 60,000

2. பல்நோக்கு சுகாதாரப்பணியாளர் (ஆண்) / சுகாதார ஆய்வாளர் நிலை II – ரூ. 14,000

3. மருத்துவமனைப் பணியாளர் – ரூ. 8,500

தகுதி:

மருத்துவ அலுவலர் பணிக்கு விண்ணப்பிப்போர் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் மருத்துவப் படிப்பை (எம்.பி.பி.எஸ்) முடித்திருக்க வேண்டும். பல்நோக்கு சுகாதாரப்பணியாளர் பதவிக்கு விண்ணப்பிப்போர் குறைந்தபட்சம் 12-ஆம் வகுப்பும், மருத்துவமனைப் பணியாளர் பதவிக்கு விண்ணப்பிப்போர் குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பும் முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இந்தக் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் 40 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பப் படிவங்களை தேனி மாவட்ட வலைதளத்திலிருந்து (https://theni.nic.in/) பதிவிறக்கம் செய்து கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பூர்த்தி செய்து சுய சான்றொப்பமிட்ட சான்றிதழ் நகல்களை இணைத்து மேற்குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இந்தப் பதவி முற்றிலும் தற்காலிகமானது என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு https://cdn.s3waas.gov.in/s39a96876e2f8f3dc4f3cf45f02c61c0c1/uploads/2023/02/2023020392.pdf என்கிற இணைப்பைப் பார்வையிடவும்.