தஞ்சை தேர் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், மன வேதனையும் அடைந்தேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். தஞ்சாவூர் அருகேயுள்ள களிமேடு கிராமத்தில் நடைபெற்ற தேர்த் திருவிழாவில் தேரின் மேல் பகுதி உயர் மின் அழுத்தக் கம்பியில் உரசி விழுந்ததால் ஏற்பட்ட மின் விபத்தில் மூன்று சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து விஜயகாந்த் அவரது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதனை பின் வருமாறு காணலாம். ‘தஞ்சை தேர் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. முறையான பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாமல் தேர் திருவிழாவை நடத்த அதிகாரிகள் அனுமதி அளித்தது என்?, அதிகாரிகள் மெத்தன போக்கு மற்றும் அலட்சியத்தால் இன்று 11 உயிர்கள் பறிபோய் உள்ளது.

இனிவரும் காலங்களில் இதுபோன்ற விபத்துகள் நடைபெறா வண்ணம் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அதனையடுத்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது இரங்கலையும் தெரிவித்துள்ளார்.