பங்குச்சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 558.41 புள்ளிகள் உயர்ந்து 53,509.04 ஆக உள்ளது.

உலகம் முழுவதும் கரோனா தாக்கத்தால் பொருளாதாரம் பற்றிய கவலை நிலவி வருகிறது. பல்வேறு நாடுகளும் தொழில்துறைக்கு ஊக்கம் தரும் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இதன் தாக்கத்தால் ஆசிய பங்குச் சந்தைகள் இன்று ஏற்றமடைந்தன. இதன் எதிரொலியாக இந்திய சந்தையும் ஏற்றத்தில் காணப்படுகிறது.

மும்பை பங்கு சந்தையில் நேற்று சென்செக்ஸ் 363.79 புள்ளிகள் உயர்வுடன் 52,950.63 ஆக முடிவடைந்து இருந்தது.
தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 122.10 புள்ளிகள் உயர்வடைந்து 15,885.15 புள்ளிகளாக நேற்று முடிவடைந்து இருந்தது.

இன்று காலை வர்த்தகம் தொடங்கியது முதலே ஏற்றம் காணப்பட்டது. சென்செக்ஸ் குறியீடு 558.41 புள்ளிகள் உயர்ந்து இதுவரை இல்லாத சாதனை பதிவாக 53,509.04 புள்ளிகளாக உயர்ந்தது.

நிப்டி குறியீடு 16 ஆயிரம் புள்ளிகளை இன்று கடந்து உள்ளது. கடந்த பிப்ரவரியில் முதன்முறையாக 52 ஆயிரம் புள்ளிகளை கடந்து இருந்தது. சென்செக்ஸ் சாதனை பதிவாக 53,500 புள்ளிகளை கடந்து உள்ளது.